Home உலகம் யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா

யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா

பிரதமர் மோடி மகிழ்ச்சி!

குஜராத்தில் உள்ள தோலவிராவை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் மட்டுமல்ல சிந்து சமவெளி நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் இருக்கின்றன.

இந்நிலையில், சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலவிரா தற்போது யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தோலவிரா ஒரு முக்கியமான நகர மையமாக இருந்தது. இது, நமது கடந்த காலத்துடனான மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version