Home இந்தியா மதுரையில் ஆடி மாத த்தில் 100 ஆடு, 600 கோழி கறிவிருந்து!!

மதுரையில் ஆடி மாத த்தில் 100 ஆடு, 600 கோழி கறிவிருந்து!!

மதுரையில் -ஆண்ககள்  மட்டுமே சமையல் செய்தனர் .

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விசேஷ பூஜை நடைபெற்று வருகிறது.

வீரசூடாமணி பட்டி, சுந்தரராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான ஐந்து முளி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கல்லு படையல் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையடுத்து நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 ஆடுகள், 600 சேவல்கள் இந்த கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு பலியிடப்பட்ட ஆடுகள் ,  சேவல்களை மண்பானையில் சமைத்தனர்.

இந்த சமையலுக்கு உப்பு ,  வேப்பிலைகளை மட்டுமே பயன்படுத்தினர் பின்னர் சாமிக்கு படையல் செய்தனர் . படையல் முடிந்த பின்னர்தான் பெண்கள்,  குழந்தைகள் விருந்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் . அதுவரைக்கும் ஆண்கள் மட்டுமே அனைத்தையும் செய்தனர் .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version