Home COVID-19 நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் விரைவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும்

நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் விரைவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும்

பெட்டாலிங் ஜெயா: அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தடுப்பூசி விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.

“இன்று காலை கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்திற்கான (JKJAV) செயல்பட்டை உறுதி செய்வதற்கான சிறப்புக் குழுவால் எனக்கு விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ், தடுப்பூசி செயல்முறை சரியாக பட்டியலிடப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31 க்குள், 60% க்கும் மேற்பட்ட பெரியவர்கள் அல்லது மொத்த மக்கள்தொகையில் 40% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பார்கள்.

“அக்டோபர் இறுதிக்குள் 100% பெரியவர்கள் அல்லது 80% மக்கள் இரு டோஸ்களையும் முடித்திருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி இயக்கத்தின் தற்போதைய விகிதத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும் என்று நம்புவதாக முஹிடின் கூறினார்.

தடுப்பூசி விகிதம் அதிகரிக்கும் போது வகை 4 மற்றும் 5 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாக குறையும் என்று நாடு தழுவிய மற்றும் சர்வதேச தரவு காட்டுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

“கடவுள் நாடினால், நம் நாடு தொற்றுநோயை மிக விரைவில் வெல்ல வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version