Home Hot News உணவகத்தில் உணவருந்தியதற்காக, முழுமையாக தடுப்பூசி போடாத ஒருவருக்கு 1,500 வெள்ளி அபராதம் விதித்தது போலீஸ்.

உணவகத்தில் உணவருந்தியதற்காக, முழுமையாக தடுப்பூசி போடாத ஒருவருக்கு 1,500 வெள்ளி அபராதம் விதித்தது போலீஸ்.

ஈப்போ: முழுமையான தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்தாத ஒருவர், உணவகத்தில் இருந்து உணவருந்தியதற்காக போலீஸ் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

பேராக் மாநில தலைமை அதிகாரி டத்தோ மியோர் ஃபரிடலதராஷ் ஃவாகிட் இச்சம்பவம் பற்றிக்கூறியபோது, “குறித்த அந்த நபர் தனது மைசேஜ்தேராவில் இரண்டு டோஸ் பெற்றதற்கான ஆதாரத்தை காட்டத் தவறிவிட்டார். மேலும் இதனை உறுதி செய்வது உணவக உரிமையாளரின் மேற்பார்வையாகும் என்றும் அவர் உணவகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கும் முன் அந்த நபரை பரிசோதித்திருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

உணவகங்களில் உணவருந்த விரும்புவோர் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மாநில தகவல் தொடர்பு குழு தலைவர் கைருல் ஷாஹிரில் முகமட் தலைமையில் நடந்த ஜலோர் கெமிலாங் கொடி பறக்கும் பிரச்சாரத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டத்தோ மியோர், மாவட்டத்தை கடக்க முயற்சித்த மற்றுமொருவருக்கும் இதே போன்று முழுமையாக தடுப்பூசி போடாத காரணத்தால் 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஜூலை 5 மற்றும் ஆகஸ்டு 19 க்கு இடையில் SOP தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 1,995 பேருக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் ஆகஸ்டு 10 முதல் அனுமதியின்றி மாவட்டங்களை கடக்க முயன்ற 14 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version