Home COVID-19 சிலாங்கூரில் 613 ஓராங் அஸ்லியினருக்கு கோவிட் -19 தொற்று உறுதி

சிலாங்கூரில் 613 ஓராங் அஸ்லியினருக்கு கோவிட் -19 தொற்று உறுதி

கோலாலம்பூர்: ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள 613 ஓராங் அஸ்லிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில நிர்வாக கவுன்சிலர் ஹீ லோய் சியான் கூறினார்.

சிலாங்கூரில் மொத்தம் 20,737 ஓராங் அஸ்லியினர் அதாவது 2.96 விழுக்காட்டினர் என்று சுற்றுலா, சுற்றுச்சூழல் & பசுமை தொழில்நுட்பம் மற்றும் ஓராங் அஸ்லி விவகாரங்களுக்கான மாநில நிலைக்குழுவின் தலைவர் கூறினார்.

மேலும் ஓராங் அஸ்லியினரின் தடுப்பூசி விகிதம் அதிகமாக இருந்ததாகவும், இதுவரை கிட்டத்தட்ட 10,000 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 22 வரை, மொத்தம் 14,352 ஓராங் அஸ்லி தடுப்பூசி போட பதிவு செய்துள்ளார் என்றும் 9,633 ஓராங் அஸ்லியினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இது 67.1 விழுக்காடு ஆகும் என்றார்.

அந்த எண்ணிக்கையில், மொத்தமாக 2,815 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 6,815 பேர் இரண்டு டோஸ்களையும் முடித்துள்ளனர். அத்தோடு ஓராங் அஸ்லியினரில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது, ”என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய போது கூறினார்.

அத்தோடு 4,000 க்கும் மேற்பட்ட ஓராங் அஸ்லியினர் இதுவரை தடுப்பூசி போடவில்லை என்றும் இதற்கு காரணம் அவர்கள் பயம் மற்றும் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாததே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version