Home COVID-19 24 மணி நேரத்தில் 339 பேர் கோவிட்-19 தொற்றுக்கு பலி

24 மணி நேரத்தில் 339 பேர் கோவிட்-19 தொற்றுக்கு பலி

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 22,070 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் 339 பேர் இந் நோய்க்கு பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 21,877 பேர் இந் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக நோயிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 1,381,668 ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை இப்போது 1,662,913ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் .

தற்போது 265,695 பேருக்கு இத்தொற்றுள்ளது என்றும் 982 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர், 470 பேருக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 339 இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் நடந்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 15,550 ஆக உயர்ந்துள்ளன.

மேலும் சிலாங்கூரில் 5,920 பேர் இன்று புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (338), சரவாக் (2,224), ஜோகூர் (1,809), கோலாலம்பூர் (1,068), பேராக் (939), கிளந்தான் (1,051), கெடா (2,072), சபா (3,010), லாபுவான் (8) , பினாங்கு (1,829), மலாக்கா (589), திரெங்கானு (488), பகாங் (610), புத்ராஜெயா (39), பெர்லிஸ் (76) என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,044,202 மில்லியன் ஆகும். தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.9 மில்லியன் பேர் என்றும் இரண்டு அளவுகளையும் பெற்றுக் கொண்டவர்களது மொத்த எண்ணிக்கை 14.1 மில்லியன் பேர் எனவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version