Home Hot News தனியார் கிளினிக் ஒன்றில் பெண்கள் கழிப்பறையில் காணொளி பதிவு செய்த ஆண் மருத்துவர் கைது

தனியார் கிளினிக் ஒன்றில் பெண்கள் கழிப்பறையில் காணொளி பதிவு செய்த ஆண் மருத்துவர் கைது

தனது  தனியார் கிளினிக்கில் பெண்கள் கழிப்பறையில் ரகசியமாக வீடியோ பதிவு செய்ததற்காக ஒரு ஆண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

ஹரியன் மெட்ரோவின் அறிக்கையின்படி, 30 வயது பெண்ணிடமிருந்து  போலீஸாருக்கு புகார் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறினார்.

46 வயதான மருத்துவர் தனது முதலாளி எனவும், தான் கழிப்பறையில் இருந்தபோது ஒரு மொபைல் போனைப் பயன்படுத்தி பதிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார். அவர் கிளினிக்கில் ஆறு வருடங்களுக்கு மேல் உதவியாளராக வேலை செய்ததாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர் பிற்பகல் 2 மணியளவில் கழிப்பறைக்குள் நுழைந்ததாகவும், அங்கு கேமிரா ஆன் செய்த நிலையில்  ஒரு மொபைல் போனை பார்த்ததாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் உடனடியாக மொபைல் போனை எடுத்து, அது மருத்துவருக்கு சொந்தமானது என்பதை உணர்ந்தார். பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியடைந்து கிளினிக்கிலிருந்து தப்பி ஓட முடிவு செய்தார், ஆனால் மருத்துவர் அவரைத் தடுத்தார்.

சந்தேக நபர் தனது செல்போனை திருப்பித் தரும்படி கேட்டார் மற்றும் பதிவை நீக்குவதாக உறுதியளித்தார் என்று ஃபக்ருதீன் கூறினார். பாதிக்கப்பட்டவர் தொலைபேசியைத் திரும்பக் கொடுத்தார். ஆனால் பதிவு நீக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

சிஐடி அதிகாரிகள் அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அந்த நபரை கைது செய்து, அவருடைய மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version