Home ஆன்மிகம் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வரும் 17ஆம் தேதி தொடங்கி புரட்டாசி மாத விழா

கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வரும் 17ஆம் தேதி தொடங்கி புரட்டாசி மாத விழா

புரட்டாசி மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள் ஆலயங்களும், விரதங்களும் என்றால் மிகையாகாது.

உலகம் முழுவதும் புரட்டாசி விழா கொண்டாடபடவிருக்கும் வேளையில் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத விழா நடைபெறும் என்று ஆலயத்தலைவர் சித.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

131 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத 5 சனிக்கிழமைகளிலும் காலை சிறப்பு ஹோமம் மற்றும் நடைபெறும்.வரும் 17.9.2021 முதல் 17.10.2021 வரை புரட்டாசி விழா நடைபெறும்.

தற்பொழுது கோவிட் தொற்றினால் அரசாங்கம் விதித்துள்ள இயக்க கட்டுபாடுகளை (SOP) பின்பற்றுமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

புரட்டாசி மாதம் விரதம் மேற்கொள்ளவிருக்கும் பக்தர்கள் வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் துளசி மாலை அணிந்து கொள்ளலாம் எனறும் ஆலயத் தலைவர் தெரிவித்தார்.

புரட்டாசி மாதம் முழுவதும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஶ்ரீ லஷ்மி வெங்கடேச யாகம் நடைபெறும். மேலும் புரட்டாசி மாதத்தில் ஆஞ்சநேயரை வழிப்பாட்டால் உடல் நலம், குடும்ப நலம் ஆகியவை சிறப்பாக இருக்கும் என்பது ஐகீதம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version