Home மலேசியா ‘ஒழுக்கக்கேடான செயல்களில்’ ஈடுபட்டதாக ஒரு உள்ளூர் ஆடவர் உட்பட 6 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு

‘ஒழுக்கக்கேடான செயல்களில்’ ஈடுபட்டதாக ஒரு உள்ளூர் ஆடவர் உட்பட 6 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: குவாந்தானில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஐந்து இந்தோனேசியர்கள் உட்பட 6 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக மாவட்ட துணை போலீஸ் தலைவர் முகமட் ரிசால் கமருதீன் தெரிவித்தார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, நேற்றிரவு 30 அமலாக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்திருந்தனர் என்றார்.

” அனைத்து சந்தேக நபர்களும் குவாந்தான் மத்திய சந்தையைச் சுற்றியுள்ள சந்துகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்ததாக நம்பப்பட்ட நிலையில் , போலீசாரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டனர். என்று அவர் கூறினார்.

மேலும் இக் கும்பலின் ஒழுக்கக்கேடான செயல்பாடு சமூக ஊடகங்களில் வைரலான பிறகு இது உள்ளூர் சமூகத்தில் மிக கவலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு “ஐந்து வெளிநாட்டு சந்தேகநபர்களும் நாட்டில் குடியிருப்பதற்கான ஆவணமற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது,” இங்குள்ள குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (IPD) நேற்று இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரிசால் கூறினார்.

சோதனையின் போது சந்தேக நபர்கள் தப்பிக்க முயன்றதாகவும் சிலர் அருகில் உள்ள கட்டிடத்தின் கூரை மீது கூட ஏறினர், ஆனால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அனைத்து சந்தேக நபர்களும் ஒழுக்கக்கேடான நடத்தைக்காக சிறு குற்றங்கள் சட்டம் 1955 ன் பிரிவு 14 இன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர். மேலும் ஐந்து வெளிநாட்டவர்களிடமும் குடிவரவு சட்டத்தின் பிரிவு 61 (1) (c) செல்லுபடியாகாத பயண அனுமதி மற்றும் பிரிவு 15 (1) (c) அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பதற்காக விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவிதார்.

Previous articleகோலாலம்பூரில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளோட்டிய 15 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது
Next articleமீன்வளத் துறை: போர்ட்டிக்சனில் 32 ஹாக்ஸ்பில் ஆமைகள் மீட்கப்பட்டன

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version