Home உலகம் பேஸ்புக் (Facebook) நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டது ஏன் ? உங்களுக்கு தெரியுமா ?

பேஸ்புக் (Facebook) நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டது ஏன் ? உங்களுக்கு தெரியுமா ?

பேஸ்புக் சமூகவலைதளம் கடந்த 2004ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்டது. தற்போது பேஸ்புக்கை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டியுள்ளது.

இந்த ஃபேஸ்புக் வலைத்தளம் ஏன் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதென நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

மிகவும் வெற்றிகரமான சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் நிறம் நீலமாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அதன் காரணம் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.

மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கை நீல நிறமாக்கியதற்கான காரணம் அவர் சிவப்பு-பச்சை நிற குருடராக இருப்பதால்தான் என்கின்றனர். அதாவது சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை அவரால் வேறுபடுத்த முடியவில்லை. மறுபுறம், அவர் சிறப்பாக பார்க்கக்கூடிய வண்ணம் நீல நிறம் என்பதே காரணம்.

நிருபர் ஜோஸ் அன்டோனியோ வர்காஸுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை உறுதிப்படுத்தினார்: “நிறங்களிலேயெ நீலம் எனக்கு மிகவும் உயர்ந்த நிறம் என்றும் என்னால் நீலத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடியும்” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version