Home உலகம் 800 கிலோமீட்டர் வரை தாக்கும் குரூஸ் ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா; ஐ.நா பாதுகாப்பு சபை...

800 கிலோமீட்டர் வரை தாக்கும் குரூஸ் ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா; ஐ.நா பாதுகாப்பு சபை எச்சரிக்கை.

வடகொரியா கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரம் சென்று தாக்க வல்ல 2 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அதிலும் முதல் சோதனையில் ஏவுகணையானது 800 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது. மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை சோதனைகளை நடத்தியுள்ளது.

இது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் வட கொரியா வார இறுதியில் புதிதாக தயாரிக்கப்பட்ட குரூஸ் ஏவுகணையை சோதித்துள்ளது.

இதற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு கழித்து தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வட கொரியாவிற்கு ஐ.நா பாதுகாப்பு சபை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிலும் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவலினால் பாதிப்புக்குள்ளாகும் போது வட கொரியாவில் இருந்து மட்டும் நோய் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலினால் வடகொரியாவின் எல்லைகள் தொடர்ந்து மூடியே உள்ளன. மேலும் அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளில் வடகொரியாவிற்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொருளாதார தடை காரணமாக வடகொரியா உணவு பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleLangkawi kembali ‘hidup’
Next articleகட்டம் 2 மற்றும் 3 மாநிலங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் நாளை முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version