Home உலகம் ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம்; சீனா பகிரங்க எச்சரிக்கை

ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம்; சீனா பகிரங்க எச்சரிக்கை

அணு ஆயுத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா இலக்காகலாம் என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ – பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை (AUKUS) அறிவித்துள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவே, இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாக, மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டு உள்ளன.

இந்தக் கூட்டணியில், ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட, 8 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன், ஆஸ்திரேலிய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் முறிவடைந்து உள்ளது.

இந்நிலையில், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை, ஆஸ்திரேலியா வாங்குவதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சீன வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கூட்டணி பிராந்திய அமைதி, நிலைத்தன்மைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Previous articleவங்காளதேச பிரஜையை கடத்தியதற்காக மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஐந்து பேரில் உள்ளூர் பெண் ஒருவராவார்
Next article24 மணி நேரத்தில் 15 தடவை பூமியை சுற்றி வந்த விண்வெளி சுற்றுலா குழு; அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தகவல்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version