Home Hot News கோவிட்-19 தொற்றினால் 4,422 பிள்ளைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்திருக்கின்றனர்- 154 பிள்ளைகள் இருவரையும் இழந்திருக்கின்றனர்

கோவிட்-19 தொற்றினால் 4,422 பிள்ளைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்திருக்கின்றனர்- 154 பிள்ளைகள் இருவரையும் இழந்திருக்கின்றனர்

கல்வி அமைச்சின் தகவல்களின் அடிப்படையில்  சுமார் 4,422 பிள்ளைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை கோவிட் -19 தொற்றில் இழந்திருக்கின்றனர் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருன் இன்று மக்களவையில் கூறினார்.

ஹன்னா இயோவின் (PH-Segambut) ஒரு கேள்விக்கு பதிலளித்த ரீனா, மலேசியாவில் கோவிட் -19  தொற்றினால் இதுவரை 154 குழந்தைகளும் தொற்றுநோயால் பெற்றோரை இழந்து அனாதையாகிவிட்டனர். அவர்களைக் கவனித்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் இல்லாத குழந்தைகள், ஒரு வளர்ப்பு குடும்பம் அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் இடத்தில் சேர்க்கப்படுவார்கள்.

ஏழு வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் 200 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும் என்றும், ஏழு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தலா 150 வெள்ளி பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகள் வழங்கப்படும் என்றும், அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த உளவியல் தலையீடும் நடத்தப்படும் என்றும் ரீனா கூறினார்.

முன்னாள் துணை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரான யோ, ஒரு மாதத்திற்கு முன்பு, ரீனா 33 குழந்தைகள் மட்டுமே கோவிட் -19 தொற்றினால் பெற்றோரை இழந்துவிட்டதாக  கூறியதாக சுட்டிக்காட்டினார். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் அமைச்சர் தனது தரவை எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைப்பார் என்பதை அறிய விரும்புவதாக கூறினார்.

தனது அமைச்சகம்  கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள், மற்றும் காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) ஆகியவற்றுக்கு இடையேயான தரவு ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து அனாதையான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மற்ற காரணங்களுக்காக பெற்றோரை இழந்த குழந்தைகளை உள்ளடக்கும் போது இத்தகைய தரவு இன்னும் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சகம் என்ன “trigger system” அறிமுகப்படுத்தப்படும் என்று கேட்டபோது, ​​ரீனா எழுத்துப்பூர்வ பதிலில் பதிலளிப்பதாக கூறினார். நாங்கள் எங்கள் தரவை புதுப்பித்துக் கொண்டிருப்போம் என்று அவர் பதிலளித்தார்.

Previous articleKEJADIAN TANAH RUNTUH BUKAN AKIBAT BANJIR-KATA MB PAHANG
Next article4,422 kanak-kanak kehilangan ibu bapa akibat Covid-19, kata Rina

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version