Home உலகம் பிரேசில் அதிபர் கொரோனா தடுப்பூசி போடாதததால் உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு; நியூயோர்க்கின் நடைபாதைக் கடையில்...

பிரேசில் அதிபர் கொரோனா தடுப்பூசி போடாதததால் உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு; நியூயோர்க்கின் நடைபாதைக் கடையில் இரவு உணவருந்தினார்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தால், உணவகத்திற்குள் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து நியூயோர்க்கின் நடைபாதைக் கடையில் அவர் இரவு உணவுை சாப்பிட்டார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் இன்று முதல் நடைபெற இருக்கிறது. 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, இந்த கூட்டத்தில் இன்று பேச இருப்பதால் இவர் நேற்றே நியூயோர்க் நகருக்கு வந்துவிட்டார். கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்க எந்த தடையும் இல்லை என்ற போதும், நியூயோர்க் நகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட, கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில், நியூயோர்க் நகரில் உள்ள பிரபல ஹொட்டேல் ஒன்றில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தனது அமைச்சரவை சகாக்களுடன், இரவு உணவு சாப்பிட சென்றார். ஆனால், அவர் கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக் கொள்ளாத காரணத்தால், உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதை அடுத்து தனது அமைச்சரவை சகாக்களுடன், நடைபாதையில் இருந்த கடை ஒன்றில், அதிபர் போல்சனாரோ இரவு உணவாக பீட்சா சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version