Home மலேசியா “டிராவல் பபிள்” திட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் லங்காவிக்கு 12,000 த்திற்கும் மேற்பட்ட சுற்றுலா...

“டிராவல் பபிள்” திட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் லங்காவிக்கு 12,000 த்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை

அலோர்ஸ்டார்: “டிராவல் பபிள்” முன்னோடி திட்டத்தின் கீழ் செப்டம்பர் 16  முதல் மொத்தம் 12,607 சுற்றுலா பயணிகள் லங்காவிக்கு வருகை தந்துள்ளனர்.

மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு குழு தலைவர் முகமட் பிர்டஸ் அஹமட் கூறுகையில் , சுற்றுலா பயணிகளில் 11,853 பேர் மலேசியர்கள் என்றும், மீதமுள்ள 754 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் கூறினார்.

நேற்று லங்காவிக்கு 8,587 சுற்றுலா பயணிகள் சென்றனர், அதே நேரத்தில் 4,020 பேர் படகு மூலம் வந்தனர் என்று, அவர் நேற்று கோலக்கெடா படகு முனையத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் இந்த மாதம் 30,000 சுற்றுலாப் பயணிகள் லங்காவிக்கு வருவார்கள் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது, ஆனால் சுற்றுலாப் பயணிகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளால் (SOP) இந்த எண்ணிக்கை அடையப்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், லங்காவியில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுற்றுலாப் பயணிகளுக்கு நடத்தப்படும் கட்டாய கோவிட் -19 முன்கூட்டிய கண்டறிதல் சோதனை முக்கியமானது என்று முகமட் பிர்டஸ் வலியுறுத்தினார்.

“இப்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கலாம் ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பள்ளி விடுமுறை தொடங்கும் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மாநில விவசாயம் மற்றும் வேளாண் வளங்கள், போக்குவரத்து மற்றும் முதன்மை தொழில்கள் குழு தலைவர் அஸ்மான் நஸ்ருதீன் கூறுகையில், சுற்றுலா பயணிகளிடமிருந்து அதிக தேவை இருந்தால் லங்காவிக்கு செல்லும் படகு பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version