Home மலேசியா IRB இருந்து திருப்பி பெறப்பட்ட வரித் தொகையில், 1.4 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கிய ஜோகூர்...

IRB இருந்து திருப்பி பெறப்பட்ட வரித் தொகையில், 1.4 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கிய ஜோகூர் சுல்தான். 

ஜோகூர் பாரு, செப்டம்பர் 29:

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் “சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளைக்கு (SIRF) “உள்நாட்டு வருவாய் வாரியத்திடமிருந்து (IRB) திருப்பி பெறப்பட்ட வரித் தொகையில் 1.4 மில்லியன் வெள்ளியை நன்கொடை அளிக்கிறார்.

ஜோகூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் அதிகப்படியான வரி செலுத்தப்பட்டதால், IRB இடம் இருந்து பணம் திரும்பப் பெறப்பட்டது என்று ஜோகூர் சுல்தான் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஓர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.

“அதிகப்படியான வரி செலுத்தப்பட்டதால், அதனை திருப்பித் தந்த IRB க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், நான் பணத்தை YSIJ க்கு நன்கொடையாக வழங்குவேன்” என்று தெரிவித்திருந்தார் .

மேலும் SIJF நிறுவனம், தொடர்ந்தும் மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகளை வழங்கும் என்றும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களின் சுமைகளை எளிதாக்க உதவிகளை வழங்கும் என்றார்.

அத்தோடு, YSIJ வாரந்தோறும் உணவு தானம் உட்பட பல்வேறு பங்களிப்புகளை மக்களுக்கு தீவிரமாக வழங்கி வருவதாக சுல்தான் இப்ராகிம் மேலும் கூறினார்.

 

– பெர்னாமா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version