Home உலகம் உலகின் விலைமதிப்பான மரம் இது தான்.. ஒரு கிலோ மரக்கட்டையின் விலை RM 4,294  

உலகின் விலைமதிப்பான மரம் இது தான்.. ஒரு கிலோ மரக்கட்டையின் விலை RM 4,294  

விலைமதிப்பு மிக்க இந்த அரிதான மரம் சிதைந்த பிறகும், அதன் எச்சங்கள் வாசனை திரவிய உற்பத்தியில் பெருமளவு உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் இதுவரை, உலகில் உள்ள விலை உயர்ந்த பொருள் வைரம் அல்லது தங்கம் என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதைக்காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று உள்ளதென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! இருக்கிறது, அதுதான் அகர் மரம். இது தங்கம், வைரம் மட்டுமல்ல உலகின் அரிய வகை நவரத்தினங்களைக் காட்டிலும் விலைமதிப்பு மிக்கது.

அக்குலேரியா மரத்தின் வழிவகையில் வந்த இந்த அகர்மரம், கற்றாழை மரம் அல்லது கழுகு மரம் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஜப்பான், அரேபியா, சீனா, இந்தியா, மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படும் இந்த அகர்மரம் தான், உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும். பிசினஸ் இன்சைடரின் கணக்குப்படி, ஒரு கிலோ அகர் கட்டைகள் அமெரிக்க டாலர் மதிப்பில் $1,00,000 விலைக்கு கூட விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலைமதிப்பு மிக்க இந்த அரிதான மரம் சிதைந்த பிறகும், அதன் எச்சங்கள் வாசனை திரவிய உற்பத்தியில் பெருமளவு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் அகர்மரத்தில் வரும் பிசினிலிருந்து, அவுட் எனும் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் மட்டுமே, ஒரு அத்தியாவசிய எண்ணெய்யாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரு கிலோ அவுட் எண்ணெய்யின் விலை 25 லட்ச ரூபாய் ஆகும்.

அகர்மரம் தனது அதிகபட்ச விலையின் காரணமாக, கடவுளின் மரம் அல்லது கடவுளுக்கு உகந்த மரம் எனவும் சில இடங்களில் அழைக்கப்படுகிறது. அக்குலேரியா மரத்தின் வழிவகையில் வந்த பல மரங்கள் சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ளன. ஆயினும் இதில் விலைமதிப்பு மிக்க அகர்மரம் சட்டவிரோதமாக பலயிடங்களில் வளர்க்கப்படுகிறது. மேலும் இது திரைமறைவில் கடத்தப்பட்டு, அகர்மரம் கடத்தல் என்பது பெருமளவு பணம்புழங்கும் ஒரு தொழிலாக இருந்து வருகிறது.

பிபிசியின் அறிக்கையின்படி, அகர்மரம் கடத்தல் செயல்பாடுகள் அதிக அளவில் நடப்பதால், இந்த அக்குலேரியா மரவகை தற்போது வேகமாக அழிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்சொன்ன அறிக்கையின்படி, ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை ஆசிய பெருந்தோட்ட மூலதன நிறுவனம் தான், அகர்மரத்தை பதனம் செய்யும் மிகப்பெரிய நிறுவனம் இதுவரை இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version