Home Uncategorized உப்பில் இத்தனை வகை உள்ளதா ? சமையலில் எந்த வகை உப்பினை பயன்படுத்த வேண்டும் ?

உப்பில் இத்தனை வகை உள்ளதா ? சமையலில் எந்த வகை உப்பினை பயன்படுத்த வேண்டும் ?

கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. உடல் வீக்கம், எடை அதிகரிப்பு, நோய் இவற்றிற்கும் உப்பிற்கும் தொடர்பு இருக்கின்றதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உப்பு பல சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. இன்று நோய்கள் பல்கிப்பெருக சில உணவுப்பொருள்களே காரணம் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அதில் வெள்ளை நிற தூள் உப்பும் ஒன்று. கல் உப்பல்ல. தூள் உப்பில் கல் உப்பில் உள்ளதைப்போலவே சோடியம் குளோரைடு இருந்தாலும் அது வெள்ளை வெளேர் என பளிர் நிறத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. கூடவே அயோடின் பற்றாக்குறையால் வரும் ஹைப்போதைராய்டு பிரச்சினையைப் போக்குகிறோம் என்று சொல்லி தூள் உப்பில் அயோடின் சேர்க்கிறார்கள். உப்பில் பல வகைகள் உள்ளது அந்த வகையில் ஒவ்வொரு உப்பை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

இந்தியாவில் பழங்காலத்தில் 5 வகை உப்புக்களை தயாரித்து பயன்படுத்தி இருக்கிறார்கள். சமுத்ரா எனப்படும் கடல் உப்பு, மண்ணில் இருந்து எடுக்கப்படும் உத்பேஜா, உறைந்து படிவங்களாக கிடைக்கும் ரோமகா உப்பு, அவுத்பிதா மற்றும் சைந்தவா ஆகிய உப்பு வகை சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடல் நீரிலிருந்து நேரிடையாக இயற்கை முறையில் எவ்வித வேதிப் பொருளும் கலக்காமல் இருப்பது கடல் உப்பு. நம் உடல் நிலைக்கு இயற்கையாக ஏற்றதும் பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வந்ததும் இந்த உப்பைத்தான். சோடியமும் குளோரைடும் இயற்கை முறையில் வேதி வினை புரிந்து உருவானது தான் கடல் உப்பு.

கல் உப்பும், தூள் உப்பும் சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு உப்பு பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் இந்த கருப்பு உப்பில் தான் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இந்த கருப்பு உப்பில் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் இதர மினரல்கள் காணப்படுகின்றன. மேலும் இதிலுள்ள கந்தக தனிமத்தால் இது வேக வைத்த முட்டையை போன்ற சுவையை கொடுக்கக் கூடியது. பார்ப்பதற்கு கருப்பு நிற படிகங்களாக இருக்கும்.

இந்துப்பு:
இமயமலையிலும், வட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளிலும் பாறைகளிலிருந்து இது வெட்டி எடுக்கப்படுகிறது. இந்துப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற பலவித சத்துக்கள் உள்ளது. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் கொடுத்துள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றுப்புழுக்கள், நெஞ்செரிச்சல், வீக்கம், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட செரிமான கோளாறுகளுக்கு வீட்டு மருந்தாக இந்த இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்துப்பா? கல் உப்பா?

கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே சோடியம் குளோரைடு உள்ள கல் உப்பைப் போல பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சேர்க்கச் சொல்கிறார்கள். அத்துடன் இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண்சத்துகளும் இருக்கின்றன. இதனால்தான் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் இந்துப்பு சேர்த்துக் கொள்ளலாம் என்கிற குரல் அதிகமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. 80 விதமான தாதுக்களைக் கொண்ட இந்துப்புக்கென சில தனித்துவங்கள் உள்ளன. அதுபற்றி அறிந்துகொள்வோம்.

பாறை உப்பு எனத் தமிழிலும், ஆங்கிலத்தில் ராக் சால்ட் எனவும், இமயமலை உப்பு எனத் தமிழிலும், ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். சைந்தவம், சிந்துப்பு, சோமனுப்பு, சந்திரனுப்பு, மதிக்கூர்மை, சிந்தூரம், மதியுப்பு என பல்வேறு பெயர்களில் இந்துப்பு அழைக்கப்படுவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. பஞ்சாப் மற்றும் இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்துப்பு அதிக அளவில் கிடைக்கிறது.

பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்புவை சுத்தமான நீரிலும், இளநீரிலும் ஊற வைத்து பதப்படுத்தி அதன்பிறகே நமக்கு விற்கிறார்கள். ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு நோய்களுக்கு மலச்சிக்கலே அடிப்படையாக இருக்கிறது. மலச்சிக்கலைப் போக்குவதில் இந்துப்பின் பங்கு அதிகம். எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் பாதிப் பழத்தின் (வெட்டிய பாகத்தில்) மீது இந்துப்பு தூவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version