Home Hot News சிலாங்கூரில் கோவிட் -19 நோயினால் அநாதரவாக்கப்பட்ட 29 பிள்ளைகளின் நலனை, சிலாங்கூர் காவல்துறை கவனித்து வருகிறது

சிலாங்கூரில் கோவிட் -19 நோயினால் அநாதரவாக்கப்பட்ட 29 பிள்ளைகளின் நலனை, சிலாங்கூர் காவல்துறை கவனித்து வருகிறது

கோலாலம்பூர்: சிலாங்கூரில் கோவிட் -19 தொற்று நோயால் பெற்றோரை இழந்து அநாதரவாக்கப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த 29 மாணவர்களின் நலனைக் கவனிப்பதை நோக்கமாகக் கொண்டு, சிலாங்கூர் காவல்துறை இன்று Prihatin Pelajar Yatim Piatu Covid -19 முயற்சியைத் தொடங்கியது.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முஹமட் இது பற்றிக் கருத்துரைத்தபோது, மாவட்ட காவல்துறைத் தலைவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த முயற்சியின் கீழ், மாணவர்களது நிலை மற்றும் நல்வாழ்வை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிப்பதாக கூறினார்.

சிலாங்கூர் கல்வித் துறை, சிலாங்கூர் சமூக நலத்துறை, சிலாங்கூர் ஜகாத் வாரியம், டாருல் ஈசான் இஸ்லாமிய அறக்கட்டளை மற்றும் சிலாங்கூர் இந்து சங்க கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

மாணவர்களுக்கும் அவர்களது பாதுகாவலர்களுக்கும் நிதி மற்றும் உதவி தொடர்ந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து முகவர் நிறுவனங்களும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்தத் திட்டம் இந்த மாணவர்களின் தொடர்ச்சியான உதவியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் அவர்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தவும் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்” என்று அவர் இன்று இங்கே சிலாங்கூர் காவல் துறை தலைமையகத்தில் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது கூறினார்.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு துறை மற்றும் சங்கத்தின் பங்களிப்பு பணம் மற்றும் உணவு கூடைகள் வடிவில் இருக்கும் என்றும் அர்ஜூனைடி கூறினார்.

மற்றொரு திட்டத்தில், தேசிய மீட்பு திட்டத்தின்( PPN) நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) பின்பற்றுவதை கண்காணிப்பதில் சிலாங்கூர் காவல்துறை கவனம் செலுத்தும் என்றும் அர்ஜூனைடி கூறினார்.

“நாங்கள் கண்காணிக்கவில்லை, ஆனால் எஸ்ஓபி மீறப்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம், மேலும் நமது சமுதாயத்திற்கு கற்றுக்கொடுப்போம்,” என்றும் அவர் கூறினார்.

 

– பெர்னாமா

Previous articlePolis buru penjenayah ‘jual’ nama TMJ
Next articleஅந்நிய செலாவணி மோசடிக்கு பின்னால் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் கொண்ட பெண் இருப்பதாக ஜோகூர் போலீசார் தகவல்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version