Home மலேசியா தனேஷ் ராஜின் நியமனம் இளைஞர்களின் குரலை உயர்த்தும் என்கிறார் நோரைனி

தனேஷ் ராஜின் நியமனம் இளைஞர்களின் குரலை உயர்த்தும் என்கிறார் நோரைனி

மலாயா பல்கலைக்கழக  இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக தனேஷ் ராஜ் நாகராஜன்  நியமிக்கப்படுவது இளைஞர்களின் குரலை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹ்மத் கூறுகிறார். நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற அளவுகோல்களைப் பார்த்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களிடமிருந்து முன்மொழியப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ததாக நோரைனி கூறினார்.

அவர் ஒரு சுறுசுறுப்பான முன்னாள் மாணவர். எனக்கு ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டது. அதன் அளவுகோல்களைப் பார்த்தேன். எனவே உயர் கல்வி அமைச்சகம் ஒரு முன்னாள் மாணவரை நியமித்தது  என்று அவர் கூறினார். நாம் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உதவ முடியும். எங்களிடம் குழு, சமூகப் பிரதிநிதிகள், செனட் மற்றும்  இளைஞர்கள் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு பிரிவுகள் உள்ளன என்று நோரைனி மேலும் கூறினார்.

ஈப்போவிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில்  உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமீதுடன் பங்கேற்ற பிறகு நோரைனி சனிக்கிழமை (அக்டோபர் 9) இவ்வாறு கூறினார். தனேஷ் ராஜின் நியமனத்தை கேள்விக்குள்ளாக்கிய யுனிவர்சிட்டி மலாயா மாணவர் சங்கத்தை (KMUM) நேற்று மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் குறித்து அவர் மேற்கண்ட கருத்தினை தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version