Home COVID-19 தடுப்பூசியால் ஆசிரியர்கள் பலர் இறந்துவிட்டதாக போலி செய்திகளை வெளியிட்டவரிடம் போலீசார் விசாரணை

தடுப்பூசியால் ஆசிரியர்கள் பலர் இறந்துவிட்டதாக போலி செய்திகளை வெளியிட்டவரிடம் போலீசார் விசாரணை

கோலாலம்பூர் : தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் 41 ஆசிரியர்கள் இறந்துவிட்டதாக பொய்யான செய்திகளை வெளியிட்ட டுவிட்டர் பயனாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் அப்துல் ஜலீல் ஹாசன் இது பற்றி கூறுகையில், சுகாதார அமைச்சகத்தால் காவல்துறைக்கு அறிக்கை வழங்கிய பிறகு விசாரணை நடத்தப்பட்டது என்றார்.

புக்கிட் அமானின் அறிக்கையின் அடிப்படையில், டுவிட்டர் பயனாளி காலித்@காலிட்ஸ் என்பவர் மீதான விசாரணைகள் குற்றவியல் அவதூறு, இன தூண்டுதல் மற்றும் இணையத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற வழிகளில் விசாரிக்கப்படுகின்றது,

மேலும் போலி செய்திகளை பரப்பாமல், ஸ்மார்ட் சமூக ஊடக பயனாளிகளாக இருக்க வேண்டும் என்றும் ஜலீல் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். இது தொடர்பான குற்றங்கள் செய்பவர்களுடன் காவல்துறை ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை வேண்டுமென்றே அச்சுறுத்தும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version