Home COVID-19 கிளந்தானில் 2,374 கோவிட் -19 நோயாளிகள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

கிளந்தானில் 2,374 கோவிட் -19 நோயாளிகள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

கோத்தா பாரு: கிளந்தான் மாநிலம் முழுவதுமுள்ள 22 தனிமைப்படுத்தல் மற்றும் குறைந்த ஆபத்து சிகிச்சை மையங்களில் (PKRC) மொத்தம் 2,374 கோவிட் -19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளந்தான் சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசைன் கூறினார்.

PKRC யின் 22 மையங்களில்  வெள்ளி விழா மண்டபம் (Silver jubilee hall), KKTM லுபோக் கோங் (KKTM Lubok Jong) , சலோர் (Salor) , கேசெடார் (Kesedar), மற்றும் SMK கம்போங் லாவூட் ( SMK Kampung Laut) ஆகியவையும் அடங்கும்.

காடாவில் (Kara) வில் உள்ள PKRC மையத்தில் 408 கோவிட்-18 நோயாளிகள் தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத்தொடர்ந்து அக்கடமி JPJ யில் 307 பேரும் பெங்காலான் செபா இண்டஸ்ரியல் மண்டபத்தில் 152 பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

“கிளந்தானில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் கோவிட் -19 சோதனையிப் நேர்மறையான பதிலை பெற்ற பின்னர் , இந்த PKRC களுக்கு கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், கிளந்தான் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளின் பயன்பாடு 73.3 விழுக்காட்டை எட்டியுள்ளது.

மாநில சுகாதாரத் துறை தனது பேஸ்புக் பதிவில், தீவிர சிகிச்சை பிரிவுகளின் (ICU) பயன்பாடு சுமார் 58.8 விழுக்காடு என்றும், கொளந்தான் மாநிலத்தில் 9,503 செயலில் உள்ள வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கிளந்தான் மாநிலத்தில் தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 1.1 மில்லியனில் 59 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்சம் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version