Home Uncategorized வெளியில் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கனுமா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்..!

வெளியில் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கனுமா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்..!

வெளி உணவுகளை சாப்பிடுவது எடை அதிகரிக்க முக்கியமான மற்றும் முதன்மை காரணம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இன்று பலரும் உடல் பருமன் உள்ளிட்ட எடை ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

முன்பை போல இல்லாமல் தற்போது உடல் எடை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் இருப்பதால், எடையை குறைக்கும் வகையில் டயட், உடல்பயிற்சிகள் என பல முயற்சிகளில் உடல் பருமன் உள்ளவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதல் எடையை இழக்கும் முயற்சிகளின் போது உடல் செயல்பாடுகளோடு உணவு பழக்கங்களும் முக்கிய பங்காற்றுகின்றன.

வீட்டில் இயற்கை முறையில் சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடுவது எடையை குறைக்க உதவும் என்ற போதிலும், சில நேரங்களில் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடும் போது அவர்களுடன் ரெஸ்டாரன்ட், ஹோட்டல்கள் உள்ளிட்ட வெளி இடங்களில் அவர்களுடன் சாப்பிடுவதை தவிர்க்க இயலாது. இருப்பினும் வெளி உணவுகளை சாப்பிடுவது எடை அதிகரிக்க முக்கியமான மற்றும் முதன்மை காரணம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எடை குறைப்பு முயற்சியில் இருப்போர் வெளியே சென்று சாப்பிடும் போது உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க கூடிய சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

காலி வயிறுடன் செல்லாதீர்கள் : நண்பர்களுடன் வெளியே செல்வது உறுதியாகி விட்டால் நீங்கள் வெறும் வயிறுடன் போகாதீர்கள். பசியுடன் வெளியே செல்லும் போது நிச்சயம் உங்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது. எனவே உடலுக்கு கேடு விளைவிக்கும் அதே சமயம் எடையை அதிகரிக்கும் தேவையற்ற உணவுகளை நீங்கள் தவிர்க்க சிறந்த வழி, பசி ஏற்படாத வகையில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வெளியே செல்வது தான். உங்களுக்கு மிகவும் பிடித்தமான கவர்ச்சியான ஜங்க் ஃபுட்களை கண்முன் ஆறுதல் கூட வயிறு நிரம்பி இருப்பதால் அதனை சாப்பிட தோணாது.
புரதத்தில் கவனம் : வெளியே சென்ற பின் நீங்கள் சப்பிட்டே ஆக வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டால் வறுக்காத புரோட்டின் உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். சிக்கன் டிக்கா, பனீர் டிக்கா அல்லது டோஃபு உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். தவிர க்ரில்ட் அல்லது ஸ்டீம் செய்யப்பட்ட உணவுகளை தேர்வு செய்து சாப்பிடும் போது காரமான சாஸை மிதமான அளவிலேயே சேர்ப்பது நல்லது. ஏனென்றால் சாஸ்களில் கலோரிகள் அதிகம்.

ஆல்கஹாலுக்கு நோ: பசியில் உணவுகளை கட்டுப்பாடின்றி சாப்பிடுவதை காட்டிலும் மிகவும் அபாயகரமானது எடை குறைப்பின் போது ஆல்கஹால் எடுத்து கொள்வது. இது உங்கள் பலநாள் உழைப்பை சில மணிநேரங்களில் காலி செய்து விடும். மது குடிப்பது உணவு கட்டுப்பாடு மற்றும் அடுத்தநாள் செய்யப்போகும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்களை நேரடியாக பாதிக்கும். எனவே வெளியே நண்பர்களுடன் சென்றால் ஆல்கஹால் உட்கொள்வதைத் தடுக்க நீங்கள் சிறிது சோடா வாட்டர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடித்து உங்களை நீங்களே கன்ட்ரோல் செய்ய வேண்டும்.

வறுத்த உணவுகள் : எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் சைட்டிஷ்களில் காணப்படும் கூடுதல் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆயிரக்கணக்கான கூடுதல் கலோரிகளை உடலில் சேர்க்கும். எனவே நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் இருக்கும் போது வெளியே சென்றால் வறுக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

Previous articleநேற்று 93 பேர் கோவிட்-19 தொற்று நோய்க்கு பலி; 10,833 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்
Next articleSUKE திட்டத்தின் கட்டுமானத்தளத்தில் நடந்த விபத்தில், பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக ஒப்பந்ததாரர்களுக்கு 300,000 வெள்ளி அபராதம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version