Home Hot News ஆட்டிசம் குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான வேன் ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்

ஆட்டிசம் குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான வேன் ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்

சிரம்பானில் ஆட்டிசம் குழந்தையை  ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநர்  மூன்று மணி நேரம் வாகனத்தில் விட்டதால் அவர் உயிரிழந்தார். அதனைத் தொடரந்து வேன் ஓட்டுநர்  நாளை முதல்  தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்றும் விசாரணைக்கு உதவுவதற்காக அக்டோபர் 18 ஆம் தேதி வரை 34 வயதுடைய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் சைட் இப்ராகிம் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் மரணம் குறித்த போலீஸ் அறிக்கையைத் தொடர்ந்து குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a) இன் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக வேனின் ஓட்டுநரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக ஹரியன் மெட்ரோ முன்பு தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர் தாமான் நுசாரி அமானில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு, வேன் டிரைவர் நேற்று மதியம் அனுப்பியிருக்க வேண்டும். இருப்பினும், வேன் டிரைவர் தாமான் நுசாரி பாயு 2 இல் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பினார். பாதிக்கப்பட்டவர் மதியம் 2.30 முதல் 5.30 வரை தனது வாகனத்தில் இருப்பதை உணராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், முகமட் பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பான விஷயங்கள் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version