Home உலகம் பிரிட்டனின் தேவாலயம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து !

பிரிட்டனின் தேவாலயம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து !

பிரிட்டன் நாட்டில், தனது தொகுதி மக்களை சந்திக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் என்பவரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது கட்சியைச் சேர்ந்தவர், டேவிட் அமெஸ். 69 வயதாகும் இவர், எசெக்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

டேவிட் அமெஸ், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில், தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமையான இன்று, எசெக்ஸ் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில், பொது மக்களை சந்திப்பதற்காக வந்தார்.

அப்போது அங்கு வந்த 25 வயது இளைஞர் ஒருவர், டேவிட் அமெஸ் அருகே சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார். இதை அடுத்து அங்கு இருந்த போலீசார், எம்.பி.,யை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மறைவுக்கு, இங்கிலாந்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த எம்.பி., டேவிட் அமெசுக்கு, மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர். பட்டப்பகலில் சர்ச்சில் எம்.பி., கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version