Home Hot News சூடானின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்; அங்குள்ள 42 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

சூடானின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்; அங்குள்ள 42 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

கோலாலம்பூர், அக்டோபர் 25 :

சூடானில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கார்டூமில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட 42 மலேசிய பிரஜைகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று விஸ்மா புத்ரா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

ஆப்பிரிக்க நாடான சூடானை அந்நாட்டு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சூடானில் உள்ள மலேசிய குடிமக்களுடன் மலேசியதூதரக அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்றும் அந்த 42 பெரும் பாதுகாப்பாக உள்ளதாக கார்டூமில் உள்ள மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடானில் இராணுவம் ஆடசிக்கு வந்ததால் பதாட்டமான சூழ்நிலை இருந்தபோதிலும், மலேசிய வெளியுறவு அமைச்சகம் மலேசியத்தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகளைக் கொண்ட பெட்ரோனாஸ் சூடான் வளாகம் உட்பட அனைத்து அமைப்புக்களும் மலேசியாவின் நலனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தொடரும் என்றும் அது தெரிவித்தது.

” மேற்கண்ட விஷயங்கள் மற்றும் சூடானில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை காரணமாக சூடானுக்கான மலேசிய பொறுப்பாளர் டி அஃபேர்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர் அவசர அவசரமாக, இன்று பிற்பகல் விஸ்மா புத்ராவுக்கு வரவழைக்கப்பட்டார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்களன்று (அக்டோபர் 25) , சூடானின் இராணுவம் அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை கைது செய்தத்துடன், இராணுவக் கையகப்படுத்துதலுக்கு அரசு ஆதரவு மறுத்ததால், அவரை ஒரு இனம் தெரியாத இடத்திற்கு மாற்றியுள்ளது.

மூன்று தசாப்தங்களாக நாட்டை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர், 2019 ஏப்ரலில் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து சூடான் இந்த அதிகாரப் போட்டியில் மூழ்கியது. மேலும் சூடானின் குடிமக்களுக்கும் இராணுவத் தலைவர்களுக்கும் இடையே பல வாரங்களாக பதற்றம் நிலவி வந்தது.

பிரதமர் ஹம்டோக்கைத் தவிர, அவரது நிர்வாகத்தில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகளையும் ஆயுதம் தாங்கிய படையினர் தடுத்து நிறுத்தினர், மேலும் இணைய அணுகலையும் சீர்குலைத்தனர் அத்தோடு நாட்டின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களையும் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூடானின் இராணுவத் தலைவர் ஜெனரல் அப்துல் ஃபத்தா அல்-புர்ஹான் அரசாங்கம் கலைக்கப்பட்டதாக அறிவித்து நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

எனவே சூடானில் மலேசிய தூதரகத்தின் உதவி தேவைப்படும் மலேசியர்கள் கார்ட்டூமில் உள்ள மலேசிய தூதரகத்தை +249 99 070 0350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது mwkhartoum@kln.gov.my க்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது தூதரகத்தின் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பு கொள்ளவும் என்றும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர்கள் விஸ்மா புத்ராவை 03-88874201 / 4530 (அலுவலக நேரங்களில்) அல்லது 03-88874570 (அலுவலக நேரத்திற்குப் பிறகு) என்ற எண்களிலும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது .

Previous articleகடந்த 24 மணி நேரத்தில் 4,782 கோவிட் -19 புதிய தொற்றுக்கள் பதிவு , 7,414 பேர் குணமடைந்தனர்
Next articleதொலைபேசி தொலைந்ததில் ஆரம்பித்த சண்டை உயிரை பறித்ததில் முடிந்தது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version