Home Hot News கெடாவில் வெள்ளம் காரணமாக 234 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தனர்

கெடாவில் வெள்ளம் காரணமாக 234 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தனர்

பாலிங், அக்டோபர் 31 :

கெடாவில் நேற்று பெய்த மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 234 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்றிரவு அவர்களின் வீடுகளில் ஒரு மீட்டர் அளவிற்கு வெள்ளம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஏழு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்தனர்.

பாலிங் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு செயலகம், கப்டன் (PA) ரசிடா காசீம் இதுபற்றிக் கூறும்போது, சியோங், போங்கோர், பாலிங், புலை மற்றும் குபாங் துணை மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட ஐந்து இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

செகோலா கெபாங்சான் (SK) தஞ்சோங் பாரி, SK சியோங், SK டிட்டி கந்துங், SK துங்கு புதேரா, SK புலை, SK கெடா மற்றும் திவான் ஒராங் ராமாய் பேங்கோல் டேரம் ஆகிய இடங்களில் ஏழு PPS திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த வியாழன் முதல், மொத்தம் 369 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், 234 பேர் மட்டுமே இன்று காலை 8 மணி வரை PPS இல் இருப்பதாகவும் ரசிடா கூறினார்.

“பல கிராமங்களில் பாதிக்கப்பட்ட இடங்களின் நிலைமை மேம்பட்டு வருவதால், தஞ்சசமடைந்தவர்கள் திரும்பி அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர், இருப்பினும், வெள்ளம் தொடர்ந்தால் PPS இன்னும் திறந்திருக்கும் என்றார்.

“அவர்களில் சிலர் வீட்டை சுத்தம் செய்ய வீட்டிற்குச் சென்று இரவில் மீண்டும் பிபிஎஸ்க்கு வருகிறார்கள்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version