Home உலகம் மக்கள் முன் முதன்முதலாக தோன்றிய தலிபான் தலைவர்

மக்கள் முன் முதன்முதலாக தோன்றிய தலிபான் தலைவர்

தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றியுள்ளார். ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் பேசியுள்ளார்.

தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார்.

இதன் காரணமாக, புதிய தலிபான் அரசின் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டது. அவர் இறந்துவிட்டதாகக் கூட கூறப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமையன்று, ராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக அகுந்த்ஸடா தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றதாக தலிபான் அலுவலர்கள் தெரிவித்தனர்.

அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படமோ விடியோவோ எடுக்கப்படவில்லை. ஆனால், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட விடியோ தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அமீருல் மொமினீன் என்றழைக்கப்படும் அகுந்த்ஸடா, அங்கு மதம் தொடர்பாகவே பேசியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version