Home உலகம் ‘சவாலான’ சூழலைக் காரணம் காட்டி, சீனாவிலிருந்து முற்றாக வெளியேறியது yahoo நிறுவனம்

‘சவாலான’ சூழலைக் காரணம் காட்டி, சீனாவிலிருந்து முற்றாக வெளியேறியது yahoo நிறுவனம்

சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்கள் விதித்துள்ள நிலையில், ‘Yahoo’ நிறுவனம் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளது.

உலகின் பெரும் நிறுவனங்களுக்கு சீன அரசின் நடவடிக்கைகள் எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது, இதனையடுத்து yahoo நிறுவனம் சீனாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவில் தொழில் செய்ய சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சிக்கலான சட்டநிலை காரணமாக எங்களது அனைத்து சேவைகளும் கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் சீனாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

“yahoo நிறுவனம் பயனாளர்களின் உரிமைகள் இலவச மற்றும் திறந்த இணையம் ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சீனாவிலிருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version