Home உலகம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எட்டு பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எட்டு பேர் பலி

மலாங், நவம்பர் 5 :

இன்று (நவம்பர் 5) ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததையடுத்து, சேறும் சகதியுமான மலைப்பகுதிகளுக்கு அடியில் தப்பியவர்களைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய மீட்புப் படையினர் போராடி வருகின்றனர் என்று இந்தோனேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றுப் பெய்த மழையினால் மலாங் மற்றும் ஹைலேண்ட் நகரமான பத்து ஆகிய இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, சேறு மற்றும் குப்பைகள் வெள்ளத்துடன் சேர்ந்து வீடுகளை மூழ்கடித்தது, அதே நேரத்தில் வெள்ள நீர் வீட்டின் சுவர்கள் உள்ளூர் பாலங்களை அழித்தது.

இதுவரை ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், அதே நேரத்தில் 8 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளனர் .

இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமைத்துறையின் அறிக்கையின்படி, இறந்தவர்கள் உடல்கள் பைகளில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும், பத்துவில் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

“இதுவரை, மூன்று பேரை இன்னும் காணவில்லை” என்று ஏஜென்சியின் தலைவர் அப்துல் முஹாரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

செப்டம்பரில் தொடங்கிய மழைக்காலத்தில் தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டம் முழுவதும் அபாயகரமான நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவை ஏற்படுவது வழமையாது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, பேரழிவுகள் பெரும்பாலும் காடழிப்பு மற்றும் மோசமான தணிப்பு திட்டமிடல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

சுமத்ராவில் கடந்த மாதம் வீசிய புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version