Home COVID-19 இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய 2 மாணவர்களுக்கு AY.4.2 டெல்டா பிளஸ் மாறுபாடு

இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய 2 மாணவர்களுக்கு AY.4.2 டெல்டா பிளஸ் மாறுபாடு

பெட்டாலிங் ஜெயா: கோவிட்-19 இன் AY.4.2 டெல்டா பிளஸ் மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றுகளை சுகாதார அமைச்சகம் இன்று கண்டறிந்துள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய இரண்டு மலேசிய மாணவர்களிடம் AY.4.2 துணை மாறுபாடு கண்டறியப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மலேசியர்கள் இருவரும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களின் முதல் RT-PCR முடிவு தொற்று இல்லை என்று இருந்தன. ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அக்டோபர் 7 அன்று எடுக்கப்பட்ட இரண்டாவது சோதனையில் கோவிட் தொற்று இருப்பதாக வந்தது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் AY.4.2 மாறுபாட்டிற்கு எதிராக இன்னும் பயனுள்ளதாக இருப்பதாகவும், தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை போன்ற SOP ஆகியவை மலேசியாவில், குறிப்பாக அனைத்துலக நுழைவு புள்ளிகளில் இந்த மாறுபாட்டின் பரவலின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

மாறுபட்ட வைரஸ் தொற்று சமூகத்தில் பரவியிருக்கிறதா என்பதை அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றார். அக்டோபர் வரை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முழு மரபணு வரிசைமுறையில் 10% டெல்டா பிளஸ்  மாறுபட்ட வைரஸ் இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version