Home Hot News மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றதைக் கண்டித்ததற்காக அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றதைக் கண்டித்ததற்காக அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

கோலாலம்பூர், நவம்பர் 8 :

நேற்று தனது தம்பி பேனாக் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

பெட்டாலிங் ஜெயா காவல்துறையின் தலைமை துணை ஆணையர் முஹமட் ஃபக்ருதின் அப்துல் ஹமீத் கூறுகையில், இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் 12.08 மணியளவில் கிளானா ஜெயாவிலுள்ள தாமான் புத்ரா டாமாய் என்ற இடத்தில் நடந்தது.

அனுமதியின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காக 24 வயதான பாதிக்கப்பட்டவருக்கும் அவரது 15 வயது சகோதரனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த மூத்த சகோதரரின் நண்பர் சண்டையை நிறுத்த முயன்றதில் காயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 24 வயது இளைஞன் மார்பு மற்றும் உடற்பகுதியில் காயங்களுடன் தரையில் கிடந்ததைக் கண்டனர். சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

மேலும் இச்சண்டையில் 19 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் நண்பரின் முதுகிலும் காயம் ஏற்பட்டது.

“சண்டையை நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில், சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையை பாதிக்கப்பட்டவரின் நண்பர் விலக்க முயன்றார், ஆனால் அவர்களுக்கு இடையில் நடந்த கைகலப்பில் அவரும் வெட்டப்பட்டார்.

அவர்கள் காயமடைந்ததைக் கண்ட சந்தேக நபர் பேனாக் கத்தியை தூக்கி எறிந்தார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மலாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும்அவர்கள் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கைக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதற்காக மூத்த சகோதரர் தனது தம்பியை கண்டித்தபோதே, அவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது.

“சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் நான்கு அங்குல நீளமுள்ள பேனாக் கத்தியை நாங்கள் கைப்பற்றினோம்.” பள்ளிபடிப்பை இடைநிறுத்திய சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் சந்தேகநபரின் மேல் ஏற்கனவே திருட்டு தொடர்பான குற்றப்பதிவு இருப்பதாகவும் முகமட் ஃபக்ருதீன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version