Home COVID-19 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,400 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி; 1,...

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,400 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி; 1, 190 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவிட் -19 தொற்றினால் 1,190 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் புதிதாக அங்கு 39,400 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கோவிட் -19 தொற்றினால் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 88,34,495-ஆக உயா்ந்துள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,982 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version