Home Hot News கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆகக் குறைந்தது

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆகக் குறைந்தது

அலோர் ஸ்டார், நவம்பர் 13 :

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் மட்டுமே, இன்னும் பெண்டாங்கில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெடா சிவில் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் முஹமட் முவாஸ் முகமட் யூசாஃப் கூறுகையில், தானா மேராவிலுள்ள திவான் ரகான் சுகானில் இயங்கிவந்த PPS இன்று மூடப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறினார்.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி திறக்கப்பட்ட PPS இன்று மாலை 4 மணிக்கு மூடப்பட்டதுடன் அங்கு தங்கியிருந்த அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

“இன்று மாலை 4 மணி நிலவரப்படி 13 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் மட்டும் திவான் செண்டரவாசியில் உள்ள PPSஇல் தங்கியுள்ளனர். அத்தோடு இந்த ஒரு PPS மட்டுமே இயங்கிவருகிறது என்றார்.

மேலும், “பெண்டாங் மாவட்டத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து குறையும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version