Home உலகம் இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் எப்போது? தேதி, நேரம் பற்றிய தகவல்கள்..

இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் எப்போது? தேதி, நேரம் பற்றிய தகவல்கள்..

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவை சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் சீரமைக்கப்படும் போது ஏற்படும் நிகழ்வுகளாகும். சூரிய கிரகணமானது சந்திரன் சூரிய ஒளியின் வழியில் வந்து அதன் நிழலை பூமியில் செலுத்தும் போது நிகழ்கிறது.

சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் இந்த சூரிய கிரகண நிகழ்வு நடக்கிறது. சூரியனிடமிருந்து வரக்கூடிய ஒளியை பூமிக்கு நேர்கோட்டில் சந்திரன் இடை மறிப்பதால் இந்த கிரகணம் நிகழ்கிறது.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி 2021 அன்று நிகழ உள்ளது. இது அமாவாசை அன்று அதாவது மார்கழி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ திதியில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கமாகும்.அந்த வகையில் சரியாக 15 நாட்களுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த முறை முழு சூரிய கிரகணமாக நிகழ உள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி 2021 சனிக்கிழமை அன்று நிகழக்கூடிய சூரிய கிரகணம் மலேசிய நேரப்படி நண்பகல் 1.29  மணிக்கு தொடங்கி மாலை 5.37 மணி வரை நீடிக்கும். அதாவது 4 மணி நேரம் 8 நிமிடங்கள் நீள்கிறது இந்த நிகழ்வு. இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். இதனால் மலேசியாவிற்கு  எந்த பாதிப்பும் ஏற்படாது.

மேலும் இந்த இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால், இந்த சூரிய கிரகண நிகழ்வை இந்தியாவில் காண முடியாது. இருப்பினும் டிசம்பர் 4ஆம் தேதி அன்று கிரகணத்தை இணையத்தில் நேரடியாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version