Home உலகம் தாய்லாந்தில் அறிமுகமாகிறது கஞ்சா பீட்சா

தாய்லாந்தில் அறிமுகமாகிறது கஞ்சா பீட்சா

பாங்காக், நவம்பர் 27;

தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தாய்லாந்து நாட்டில் உள்ள ‘கிரேசி ஹாப்பி பீட்சா’ இந்த தகவலினை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் நிறுவனத்தின் மேலாளர் பானுசக் குன்சாட்பூன் கூறியதாவது, கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். இந்த பீட்சாவில் பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது என்றார்.

“இது ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரம். நீங்கள் கஞ்சாவை சுவைக்கலாம், பிறகு போதுமான அளவு இருந்தால், உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம் என்றும் குன்சாட்பூன் கூறினார்.

9-இன்ச் பீட்சாவின் விலை 499 பாத் (சுமார் RM49) இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு 100 பாட் (RM10) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தாய்லாந்து அதன் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் சாறுகளின் தடையை நீக்கியது. அத்தோடு தென்கிழக்கு ஆசியாவில் முதல் கஞ்சாவிற்கு அனுமதியளித்த நாடாகவும் தாய்லாந்து உள்ளது.

மேலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் அவற்றை உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தவும் தாய்லாந் அனுமதித்தது. CBD தயாரிப்பில் உள்ள THC இன் அளவு அதன் மொத்த எடையில் 0.2% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கஞ்சாவிற்கு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version