Home Hot News பணம் எடுக்கச் சென்றவர்கள் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர (ATM) அறையில் மாட்டிக்கொண்ட பரிதாபம்; கெனிங்காவில்...

பணம் எடுக்கச் சென்றவர்கள் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர (ATM) அறையில் மாட்டிக்கொண்ட பரிதாபம்; கெனிங்காவில் சம்பவம்

கெனிங்காவ், நவம்பர் 29 :

இன்று அதிகாலை இங்குள்ள வங்கி ஒன்றில் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் (ATM) பணத்தை எடுப்பதற்காக சென்ற இருவர், அறைக் கதவுகள் தாமாகவே பூட்டிக்கொண்டதால், பரிதாபமாக அந்த அறைக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர்.

அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க இருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், வங்கியின் கதவு திடீரென தானாக பூட்டப்பட்டதால், பாதிக்கப்பட்ட இருவரும் உதவிக்கு தீயணைப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் இது பற்றிக் கூறுகையில், தங்களுக்கு அதிகாலை 2.15 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. புகாரைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை வெளியேற்ற உதவுவதற்காக நான்கு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக’ அவர் கூறினார்.

“தானியங்கி கதவு (ரோலர்) திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் ஏடிஎம் இயந்திர அறையில் சிக்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

“சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், ‘க்ரோபார்’ உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களை மீட்டனர் ,” என்று இன்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் எந்த காயமும் இன்றி விடுவிக்கப்பட்டார், மேலும் மீட்பு நடவடிக்கை அதிகாலை 2.38 மணியளவில் முடிந்தது.

Previous articleKes pertama positif Covid-19 VTL Malaysia-Singapura dikesan – Khairy
Next articleஒமிக்ரான் வைரஸ்:கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்களை குறி வைக்கும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version