Home மலேசியா மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க கார்ல்ஸ்பெர்க் மலேசியா முனைப்பு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க கார்ல்ஸ்பெர்க் மலேசியா முனைப்பு

ஷா ஆலம்: மது அருந்த விரும்பும் நபர்கள் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ள கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனம் வழிவகுக்கின்றது. அந்நபர்கள் தங்கள் வாகனத்தில் பயணம் மேற்கொள்ளாமல் சிறப்புக் கழிவு முறையிலோ இலவசமாகவோ இ-ஹெய்லிங் வாடகைக் கார்களிலும் உடனடி அழைப்பு வாகனங்களிலும் பயணம் மேற்கொள்ள அந்நிறுவனம் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

#Celebrate Responsibly எனும் இவ்வாண்டின் பிரச்சாரம் பொருளாதார மேலும் சமூக நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக நெருக்கடியை எதிர்நோக்கி இருந்த உணவு, பானம் விற்பனை மையங்கள் மேலும் மீட்சி பெறுவதற்கு கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனம் இதன் மூலம் தனது ஆதரவை வழங்குகிறது.

தொடர்ந்து 7ஆவது ஆண்டாக இந்நிறுவனம் மதுபான உற்பத்தியாளர் என்ற முறையில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது எனும் முக்கியத்துவத்தைப் பரிந்துரைக்கின்றது.

அதிலும் 2020 சாலைப் போக்குவரத்துச் சட்டதிருத்தத்தில் மது பயன்பாடு விகிதம் ரத்தத்தில் 0.08 விழுக்காட்டில் இருந்து 0.05 விழுக்காட்டிற்குக் குறைக்கப்பட்டதையும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்கின்றோம். இதன் அடிப்படையில் இவ்வாண்டு நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடத்தப்படும் CELEBRATERESPONSIBLY எனும்பிரச்சாரமானது கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பெருநாட்களை உட்படுத்தியுள்ளது.

இந்தப் பெருநாள் காலகட்டத்தில் பலர் மது அருந்த வாய்ப்புள்ளது. அதேபோல் மாநிலம் கடந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அச்சமயத்தில் பலரும்சாலையில் வாகனங்களில் பயணிப்பர்.

எனவே அந்தச் சமயத்தில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. அதற்கு மாறாக இ – ஹெய்லிங் உள்ளிட்ட வாகனங்களை அவர்கள் நாடலாம்.

கடந்த ஆண்டுகளைப் போலவே கார்ல்ஸ்பெர்க் மலேசியா கிரேப், ரைடிங் பிங்க் போன்ற இ – ஹெய்லிங்சேவை வழங்குபவர்களோடுஇம்முறையும் தனது கூட்டமைப்பைத் தொடர்கிறது.

அதோடு ஏர் ஆசியா ரைடர், லைலா, படி டிரைவர் எனும் புதியசேவை வழங்குபவர்களுடனும் கார்ல்ஸ்பெர்க் மலேசியா இம்முறை கூட்டமைப்பை வைத்துக் கொள்கின்றது.

CELEBRATERESPONSIBLY எனும் எளிய சிறப்புக் கழிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் 10 ரிங்கிட் கழிவு பெற்று நாடு தழுவிய அளவில் உள்ள கார்ல்ஸ்பெர்க் மலேசியா பங்காளித்துவ, பார், உணவகங்கள், பிஸ்ட்ரோக்களுக்குச் செல்லலாம்.

இந்தச் சிறப்புக் கழிவினை அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி  மாலை 5.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் (மதுபான விருந்து) செல்லவேண்டுமாயின் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களுக்கு ஓட்டுநர் சேவையையும் பெற்றுக் கொள்ளலாம்.

TREVO app10% என்ற கழிவுக் குறியீட்டின் வாயிலாக அவர்கள் படி டிரைவர் சேவையில் ஒரு மணி நேரத்திற்கு இலவச ஓட்டுநர் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் லைலா எனப்படும் சேவைத் தரப்பிடம் இருந்து 10 விழுக்காடு வரை கழிவு பெறலாம்.

பொறுப்புடைமை கொண்ட மதுபான தயாரிப்பாளர்கள் என்ற முறையில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் என்றும் கருத்தில் கொள்கின்றது என அதன் கார்ப்பரெட் நிர்வாக இயக்குநர் பெர்ல் லாய் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version