Home உலகம் ஆங் சாங் சூ கிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மியன்மார் நீதிமன்றம் !

ஆங் சாங் சூ கிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மியன்மார் நீதிமன்றம் !

மியான்மரில் ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் தலைவர் ஆங் சாங் சூ கிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் கருத்து வேறுபாடுகளைத் தூண்டியது மற்றும் கோவிட்-19 விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

இந்நிலையில், திருமதி சூகி அவருக்கு எதிராக தேர்தலில் சட்டத்தை மீறி வாக்கி டாக்கி பெற்றது, தேசத்துரோக வழக்கு, ரகசிய சட்டத்தை மீறியது மற்றும் சட்டவிரோதமாக தங்கம் பெற்றது போன்ற மொத்தம் 11 குற்றச்சாட்டுகலள் சுமத்தப்பட்டன. ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

மியான்மரில், கடந்த வருட கடைசியில் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த ஆங் சான் சூ கியின் அரசு, அந்நாட்டு இராணுவத்தால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் திகதி அன்று கவிழ்க்கப்பட்டது.

அதன்பின்பு, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். இதில், தற்போது வரை, 900-த்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக, ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரான ஆங் சான் சூ கி உட்பட பல தலைவர்களை இராணுவம், வீட்டு காவலில் வைத்தது.

இதனிடையே, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ராணுவ ஆட்சியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாகவும், அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் என்றும் ராணுவத் தலைவர் மின் ஆங் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆங் சாங் சூகிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆங் சாங் சூகிக்கு 505(பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் அதிபர் வின் மைன்ட்டுக்கும் இதே பிரிவுகளின் கீழ் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

-BBC

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version