Home Hot News சுங்கை துவாவில் டிசம்பர் 11ஆம் தேதி 12 மணி நேரம் நீர் விநியோகத்தடை: PBAPP தகவல்

சுங்கை துவாவில் டிசம்பர் 11ஆம் தேதி 12 மணி நேரம் நீர் விநியோகத்தடை: PBAPP தகவல்

 ஜார்ஜ் டவுன், டிசம்பர் 6 :

இங்குள்ள சுங்கை துவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 6,200 நீர்க் குழாய்கள் இணைப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் சனிக்கிழமை (டிச. 11) 12 மணி நேரம் தண்ணீர் விநியோகம் தடைப்படும் என்று பினாங்கு நீர் வழங்கல் கழகத்தின் (PBAPP) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஜசெனி மைடின்சா தெரிவித்தார்.

இந்த நீர் விநியோகத்தடை ஜாலான் சுங்கை துவா மற்றும் கிளினிக் கேசிஹத்தான் சுங்கை துவா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பத்து உபானில் உள்ள சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் அதன் குடியிருப்புகள், யூனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா (USM) ஜாலான் சுங்கை துவா, டிப்போ ரபிட் பினாங், தபக் பெஸ்டா சுங்கை நிபாங் மற்றும் லோட்டஸ் சுங்கை துவா ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜாலான் சுங்கை துவாவில் (போர் டே உயர்நிலைப் பள்ளிக்கு முன்னால்) 450 மிமீ மைல்ட் ஸ்டீல் (MS) முக்கிய குழாயில் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் பினாங்கு கழிவுநீர் சேவைத் துறையின் திட்டத்திற்கு உதவுவதாக ஜசெனி கூறினார்.

“இந்த அனைத்து வேலைகளையும் எளிதாக்க, நீர்க்குழாயின் ஒரு பகுதியை தனிமைப்படுத்தி ‘மூட வேண்டும்’. இந்த நீர்க்குழாய் நிறுத்தம் ஜாலான் சுங்கை துவாவில் குறிப்பிட்ட பகுதிகளில், 12 மணிநேர திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தில் தடங்கலை ஏற்படுத்தும் என்றும் தற்காலிக சிரமத்திற்கு PBAPP வருந்துகிறது என்றும் அவர் கூறினார்.

“நீர் விநியோகம் தடைப்படுவதால், பாதிக்கப்படும் பகுதியில் உள்ளவர்கள் 12 மணி நேரம் தண்ணீர் தடையின் போது பயன்படுத்த, போதுமான தண்ணீரை சேமித்து வைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

Previous article24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 4,262 – குணமடைந்தோர் 5,894
Next articleOps Khas சோதனை மூலம் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version