Home Hot News 17 சட்டவிரோத குடியேறிகளை கடத்திய குற்றச்சாட்டில் உள்ளூர் வாகன ஓட்டுநர் மற்றும் அவரது பெண் உதவியாளர்...

17 சட்டவிரோத குடியேறிகளை கடத்திய குற்றச்சாட்டில் உள்ளூர் வாகன ஓட்டுநர் மற்றும் அவரது பெண் உதவியாளர் கைது

தும்பாட், டிசம்பர் 8 :

இன்று அதிகாலை, 17 சட்டவிரோத குடியேறிகளை கடத்தியதற்காக ‘டெகோங் டாராட் ‘(சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கடத்துபவர்களின் பெயர்) என சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர்வாசிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

GOF எட்டாவது பட்டாலியன் உதவி கட்டளை அதிகாரி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் கே. கிருஷ்ணன் கூறுகையில், இங்குள்ள ஜாலான் சிம்பாங்கான் என்ற இடத்தில் பொது நடவடிக்கைப் படை (ஜிஓஎஃப்) உறுப்பினர்கள் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது, 19 பேர் வேனில் பயணித்துக்கொண்டிருந்ததை கண்டனர்.

“பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் வாகனத்தை நிறுத்துமாறு வேன் ஓட்டுநரிடம் உத்தரவிட்டனர். “வேன் சிம்பாங்கனில் இருந்து ஜூபக்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது நிறுத்தப்பட்டது. வேனை சோதனை செய்ததில், வேனுக்குள் 17 சட்டவிரோத குடியேறிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

“சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் ஆண்களாவார். 16 தாய்லாந்து நாட்டவர்களும் ஒரு கம்போடியரும் உள்ளடக்கிய 17 பேராவர். மேலும் வேன் ஓட்டுநர் மற்றும் அவரது பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து ரமேஷ் கூறுகையில், 17 பேரும் மலேசிய எல்லைப் பகுதியில் உள்ள பல சட்டவிரோத படகுத்துறை வழியாக அண்டை நாட்டிலிருந்து கிளந்தானுக்குள் நுழைந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 46 வயதான உள்ளூர் ஆணும் 48 வயதான பெண்ணும் மனித கடத்தல் கும்பல்களால் பணியமர்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில்கைது செய்யப்பட்ட 20 முதல் 50 வயதுக்குட்பட்ட சட்டவிரோத குடியேறிகள் மற்றும் இரண்டு உள்ளூர்வாசிகளும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அவர்கள் பயணித்த சுமார் 120,000 வெள்ளி மதிப்புள்ள வேனும் பறிமுதல் செய்யப்பட்டதாக ரமேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version