Home Hot News இந்த ஆண்டு பொது நடவடிக்கைப் படையினரால் 1,119 நபர்கள் கைது; RM90 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள...

இந்த ஆண்டு பொது நடவடிக்கைப் படையினரால் 1,119 நபர்கள் கைது; RM90 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன

கோலாலம்பூர், டிசம்பர் 15 :

இந்த ஆண்டு ஜனவரி முதல் பொது நடவடிக்கைப் படை (GOF) நடத்திய பல்வேறு நடவடிக்கைகளில் மொத்தம் 1,119 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் RM97.5 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றுள் ஓப்ஸ் நியா, ஓப்ஸ் பென்டெங், ஓப்ஸ் கோன்ட்ராபன் மற்றும் ஓப்ஸ் கசானா ஆகிய செயல்பாடுகளில் அடங்கும் என்று GOF மத்திய படைப்பிரிவு நடவடிக்கைகளின் தளபதி SAC முஹமட் அப்துல் ஹலீம் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 806 ஆண்களும் 299 பெண்களும் அடங்குவர். இவர்களுள் 14 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்படடவர்கள் 1 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களாவர். அனைவரும் சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் நடத்தப்பட்ட 176 சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல, இந்தோனேசியா, மியான்மார், வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில், மொத்தமாக 41 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகளும், அதைத் தொடர்ந்து 38 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானம் மற்றும் கெத்தும் இலைகள்.

கைப்பற்றப்பட்ட மற்ற பொருட்களில் RM9.1 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள், உலோகம்/செம்பு (RM3.1 மில்லியன் மதிப்பு), கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களான அரிசி, டீசல் மற்றும் எண்ணெய் (RM 2.6 மில்லியன்), வெடிபொருட்கள் (RM 1.4 மில்லியன்), RM 802,137 ரொக்கம், மருந்துகள் ( RM202,650), அத்துடன் RM120,500 மதிப்புள்ள பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தகவல் தெரிந்தவர்களை வலியுறுத்தினார்.

– பெர்னாமா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version