Home உலகம் தந்தை நினைவு தினம் “நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை” வடகொரியாவின் அவலம்

தந்தை நினைவு தினம் “நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை” வடகொரியாவின் அவலம்

வடகொரியா நாட்டை கடந்த 1948ஆம் ஆண்டு  கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர் தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார்.1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு,  அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது.
இந்த நிலையில் தற்போது வடகொரியாவில் இருந்து தற்போது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது. வடகொரியாவின்  தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் அவர்களின் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார். இதனால் வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த காலத்தில், துக்க காலத்தில் குடித்துவிட்டுபோதையில் பிடிபட்ட பலர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
கிம் ஜோங் இல்  இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்  இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும். ஆனால்  இது கிம் ஜோங் இல் இறந்து 10 – வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Previous articleDua beradik maut, MPV dinaiki terbalik
Next article15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வேலையில்லா தந்தை மீது இரு குற்றச்சாட்டுகள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version