Home COVID-19 நாட்டில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்

நாட்டில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், டிசம்பர் 17 :

சுகாதார அமைச்சின் COVIDNOW போர்ட்டலின் அடிப்படையில், நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி, நாட்டில் உள்ள பெரியவர்களில் 4,274,115 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.

மேலும் பெரியவர்களில் 2,732,273 நபர்கள் அல்லது 86.8 விழுக்காட்டினர் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 2,831,780 நபர்கள் அல்லது 90.0 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் 315,720 நபர்கள் அல்லது 10.1 விழுக்காட்டினர் இதுவரை கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசியை செலுத்தவில்லை.

பதின்ம வயதினரில், 22,805,239 பேர் அல்லது 97.4 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 23,114,489 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் 1,031,946 நபர்கள் அல்லது 4.4 விழுக்காட்டினர் இதுவரை கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசியை செலுத்தவில்லை.

நேற்று விநியோகிக்கப்பட்ட 172,511 தடுப்பூசிகளில் 4,414 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 5,950தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் மற்றும் 162,147 தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தப்பட்டது. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை 55,563,359ஆகக் கொண்டு வந்ததுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version