Home உலகம் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எதுவென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!

உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எதுவென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!

உலகில் முதன்முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எது என்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது.

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பல மடங்கு பெருகி உள்ளது. முன்பு போன்று இல்லாமல் நமக்கு தேவையான எல்லாவற்றையும் இணைய வழியை பயன்படுத்தி பெற்று கொள்கிறோம். வங்கி சேவைகள் முதல் பள்ளி வகுப்புகள் வரை எல்லாமே ஆன்லைன் மையமாக மாறிவிட்டது. இதே போன்று முன்பெல்லாம் தகவலை பரிமாறி கொள்ள மெசேஜிங் என்கிற வசதி இருந்தது. இதை எஸ்.எம்.எஸ் என்று குறிப்பிடுவோம்.

குறிப்பாக இந்த குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்தி தான் நமது தகவல்களை பரிமாறி கொண்டு இருந்தோம். தற்போதுள்ள சாட் என்கிற வசதிக்கு மூலதலமே இந்த எஸ்.எம்.எஸ் (SMS) வசதி தான். கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வரை எஸ்.எம்.எஸ் தான் உலகை ஆண்டு கொண்டிருந்தது.

அதன் பிறகு தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் பயன்படுத்த கூடிய வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற பல மெசேஜிங் செயலிகள் வந்துவிட்டன.

உலகில் முதன்முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எது என்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது.

அதன்படி நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரி தான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version