Home Hot News வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரட்டியதாகக் கூறப்படும் வணிக வளாகம் (mall ) மன்னிப்பு கோரியது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரட்டியதாகக் கூறப்படும் வணிக வளாகம் (mall ) மன்னிப்பு கோரியது

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 :

வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலர் அந்த வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஷா ஆலம் ஏயோன் மால் பாதிக்கப்படடவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

நிர்வாகத்தின் கூற்றுப்படி, இதுபோன்ற சூழ்நிலையை அவர்கள் சந்தித்தது இதுவே முதல் முறை என்பதால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம்.

“வழக்கமாக, பெரும்பாலான ஊழியர்கள் இரவு 10 மணிக்கு பணியில் இருந்து வெளியேறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தற்போதுள்ள நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றுவதை கடுமையாக பின்பற்றியிருக்கின்றனர் ஏனெனில் அவர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை.

“நம் பணியாளர்களில் பெரும்பாலானோர், தற்போது பெய்து வரும் மழையால் கடுமையான வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

“இருப்பினும், நாங்கள் பல விசாரணைகளுக்கு பின்னர் மற்றும் வெள்ள நிலைமையை உணர்ந்த பிறகு இரவு 9.40 மணிக்கு வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது” என்று மால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆயத்தமில்லாத மற்றும் ஆட்கள் இல்லாத போதிலும், மால் 570 பேருக்கு தங்குமிடத்தை வழங்குவதை உறுதிசெய்ய தங்களால் இயன்றவரை முயற்சித்ததாக அறிக்கையில் மேலும் கூறியது.

திங்கட்கிழமை, இரவு 10 மணிக்குப் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மாலில் இருந்து துரத்தப்பட்டதாக நெட்டிசன்கள் கூறிய, ஒரு சமூக ஊடக பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

Previous articleAmaran hujan berterusan di 4 negeri ditamatkan – MetMalaysia
Next articleகுழந்தைகளுக்கான குடியுரிமை குறித்து அரசின் தடை மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version