Home மலேசியா சபா மர ஏற்றுமதி மீதான தடையை நீக்குகிறது

சபா மர ஏற்றுமதி மீதான தடையை நீக்குகிறது

கோலாலம்பூர், டிசம்பர் 28 :

சபா மாநில அரசு, அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வரையறுக்கப்பட்ட மர ஏற்றுமதி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 2018 இல் விதிக்கப்பட்ட மரக்கட்டை ஏற்றுமதி மீதான தடை முடிவுக்கு வந்துள்ளது என்று சபாவின் வனப்பாதுகாப்பு தலைமை அதிகாரி டத்தோ ஃபிரடெரிக் குகன் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின்படி, இந்த திட்டம் ஜனவரி 3, 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது.

“சபா மற்றும் சபா மரத் தொழில்கள் சங்கத்தின் மரக் கூட்டமைப்பு மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழு, இயற்கை காடுகளில் இருந்து மரத்துண்டுகளை விநியோகம் செய்வதற்கான ஒதுக்கீட்டை தீர்மானிக்கும், இது மதிப்பிடப்பட்ட வருடாந்திர உற்பத்தியில் 20 விழுக்காடாகும் என்று “தி வைப்ஸ்” என்ற இணைய செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

மே 2018 இல், அப்போதைய சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டல், மர ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை விதித்தார், இது அதன் உள்நாட்டுத் தொழிலுக்கு போதுமான விநியோகத்தை உறுதி செய்யவே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version