Home Uncategorized ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முடியுமா? இதனை மட்டும் செய்தால் போதும்

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முடியுமா? இதனை மட்டும் செய்தால் போதும்

ஏராளமானோர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுப்படுகின்றனர். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் மிரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என அவர்களின் தொல்லைகள் நீண்டுகொண்டே போகும். இன்னொரு பக்கம் தேவையில்லாத வியாதிகளையும் அடுக்கின் னொண்டே போவார்கள்.

இவை அனைத்துமே உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை அளவின்றிசாப்பிடுதல் காரணமாக  எடை கூடிகை்கும். பின்னர் எடல் எடைக் குறைப்பு என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

இதற்காக நடைபயணம், ஓட்டம், நீச்சல் மற்றும் விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி.

இப்பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த ஆய்வின்படி முதல் நாள் முழுக்க முழுக்க பழ வகைகளை மட்டும் உண்ண வேண்டும்.

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி மற்றும் சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சுவைக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். ஆனால் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் சிச்சயமாக எண்ணெய், தேங்காய் சேர்த்துக்கொள்ளவே கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3குவளை பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

5. ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4குவளை (மொத்தம் 12 குவளை) தண்ணீர் பருக வேண்டும் என ஆய்வு அறிவுறுத்துகிறது.

6. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

7. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழச்சாறு பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை சாறு செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் உடல் எடைக் குறைப்பு முடிந்தது.

எட்டாம் நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என குறித்த ஆய்வின் முடிவுகள் உறுதிபட கூறுகின்றன. இந்த உடல் எடைக் கட்டுப்பாட்டு முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது.

தேநீர் மற்றும் கோப்பி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம்.தேநீரில் எலுமிச்சை பிழிந்து  நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு தேய்க்கரண்டி எண்ணைய் சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். 3ஆவது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

4ஆவது நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5ஆம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது.

7ஆவது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம். அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது “ஜெனரல் மோட்டார்ஸ் டயட்” என்று அழைக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version