Home Hot News வெள்ளத்தின் போது திடீரென தோன்றிய முதலையால் மக்கள் அச்சம்!

வெள்ளத்தின் போது திடீரென தோன்றிய முதலையால் மக்கள் அச்சம்!

மலாக்கா, ஜனவரி 3 :

இங்குள்ள சுங்கை பூலாவ் கடோங்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது, மூன்று மீட்டர் நீளமுள்ள முதலை தோன்றியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதலை ஆற்றில் நடந்து செல்வதை குடியிருப்பாளர்கள் கண்டறிந்த பின்னர், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

மலாக்கா மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) இயக்குநர் முகமட் ஃபிர்தாஸ் மஹ்மூட் கூறுகையில், முதலையின் தோற்றம் குறித்து தமது துறை அறிந்திருப்பதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய, தாங்கள் தற்போது கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் முதலை இருப்பதை தமது துறை அறிந்திருப்பதாகவும், முதலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை அப்பகுதியில் அவர்கள் வைத்ததாகவும் அவர் கூறினார்.

“இருப்பினும், இது மனிதர்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை, இதுவரை குடியிருப்பாளர்கள் மீது எந்த தாக்குதல்களும் இடம்பெறவில்லை. இருப்பினும், முதலைக்கு இடையூறு செய்யவோ அல்லது ஆற்றங்கரையில் குறிப்பாக மீன்பிடிக்கவோ வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் முன்னதாக கூறினார்.

அவர் கூறுகையில், இதுவரை ஒரு முதலை மட்டுமே அந்த வழித்தடத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

“பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுங்கை கிளேபாங் மற்றும் பந்தாய் புத்ரியிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் தமது படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version