Home மலேசியா தாவரவியல் பூங்காவில் மலையேறிய போது தொலைந்து போன பெண் 24 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்

தாவரவியல் பூங்காவில் மலையேறிய போது தொலைந்து போன பெண் 24 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்

ஜார்ஜ் டவுன், தாவரவியல் பூங்காவின் மலைப்பகுதியில் ஏறக்குறைய 24 மணிநேரமாக காணாமல் போன மலையேற்றப் பெண், அவர் காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்களின் உதவியுடன் தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் அடங்கிய 44 பேர் கொண்ட மீட்புக் குழு இன்று தேடுதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

நேற்று மாலை 4 மணியளவில் குறித்த பெண் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவளை கடைசியாக இரவு 7.30 மணிக்குத் தொடர்பு கொள்ள முடிந்தது.

“தேடல் நடவடிக்கை இரவு முழுவதும் 2.15 மணி வரை தொடர்ந்தது, தன்னார்வ தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மலையில் நடைபயணம் செல்லும் பாதையை நன்கு அறிந்த பொதுமக்களின் உதவியுடன் என்றாஎ.

மலையடிவாரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாவரவியல் பூங்கா அருவி பகுதியில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் நான்கு செக்டார்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணி காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

பெண் காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையில் பிற்பகல் 2.57 மணியளவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டார். மாலை 4.45 மணியளவில் தேடுதல் பணி முடிவடைந்த பின்னர் அவர் பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.

Previous articleபுதிய மின் கட்டணங்கள் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்கிறார் தக்கியுதீன்
Next articleநேற்று கோவிட் தொற்றினால் 23 பேர் பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version